Friday, 18 December 2009

Phoneix பறவை...!

"இனி நீ எனக்கு வேண்டாம் !!?? " 
அவள் கடைசியாய் உதிர்த்த முத்துக்கள்.
தலை கவிழ்ந்து நின்றேன் !
ஓவவொரு மணித்துளியாய்
நின்ற இடம் எல்லாம் கண்ணீர் சிதறல்கள் !  

அந்த நொடியில் சிறகு அறுந்த Phoenix பறவையாய்
ஏனோ துடித்தேப் போனேன் !
இனி பறக்க முடியாதென்று  
சிறக்கோடிந்த பின்பும்
தலை நிமிர்ந்து நடந்தேன் !

ஓவவொரு கண்ணீர் துளிகளையும்  
சிதரடித்து சென்றேன் ! 
இனியும் சிந்த ரத்தம் மட்டுமே மிஞ்ச
தலை நிமிர்ந்து நடந்தேன் !
நடந்து கொண்டே இருந்தேன்.

வருடங்கள் பல கழிந்திட வாழ்க்கை பயணத்தில்
தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தேன் !
பிறர் சொல்லிட யாமறிந்தேன்,
நீயும் கடந்து சென்றாய்
என்னையும் வாழ்கயையும் என்று !

பறந்து கொண்டிருந்த நான்
நடக்க கற்றுகொண்றிருந்தேன் !
எவருக்கும் புரியவில்லை நான்
ஏன் மீண்டும் பறக்கவில்லை என்று !  

நான் ஒரு Phoenix பறவை
பல முறை பிறப்பேன்
பல முறை இறப்பேன் 
ஏனோ பறக்க மட்டும் மறந்து
தலை நிமிர்ந்து நடந்தேன் ! 
நடந்து கொண்டே இருந்தேன்.

0 Comments:

Post a Comment



 

My Website | My Face Book Account